கோவையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், அரசு பள்ளி மாணவனுக்கு தங்கம்

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், அரசு பள்ளி மாணவன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தியின் மகன் பிரபு. இவர் பொள்ளாச்சி அரசு ஆண்கள் மேல்நிலை 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தடகள போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, பிரபு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அரசு பொருளாதார உதவி செய்தால், தன்னால் தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று, நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று பிரபு தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Exit mobile version