ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்

அதிமுக கூட்டணியைப் பற்றி, ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்குசேகரித்த முதலமைச்சர், அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி என்றார்.

கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கொடுக்கும் அரசு அதிமுக அரசு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், போகலூரில் பரமக்குடி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகருக்கு ஆதரவாகவும், ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாகவும் முதலமைச்சர் பிரசாரம் செய்தார்.

Exit mobile version