தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். கோவை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாடு போற்றும் பல நல்ல திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அஇஅதிமுகவின் சாதனைகளை மக்களிடம் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறிய அமைச்சர், தமிழக அரசை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக வழிநடத்தி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என்றும், அவர்களின் பொய் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். சாதி, மத பேதமின்றி மக்கள் பணியாற்றும் ஒரே இயக்கம் அதிமுகதான் எனத் தெரிவித்த அவர், முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்