இலங்கையில் தொலை தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் மேல்மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொலைத்தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள், வாகனத்தின் வேகத்தை கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்புப் படையினர் நீர்கொழும்பில் மேற்கொண்ட சோதனையில், பெரியமுல்லையில் உள்ள அவரது வீட்டில் இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து ஷாபி ரஹீமை நீர்கொழும்பு காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.