இலங்கையில் ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
எவ்வித தாமதமுமின்றி விரைவிலேயே நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாகாண அடிப்படையிலும் சட்டப்படி அதிகாரம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.