இலங்கையில் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

தற்கொலை படைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 253 அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஷங்கிரிலா நட்சத்திர விடுதியில் மொஹமத் ஹாஷிம், மொஹமத் இப்ராஹிமும், சினமன் கிரான்ட் நட்சத்திர விடுதியில் இன்ஷாப் அஹமத், கிங்ஸ்பேரி நட்சத்திர விடுதியில் மொஹமத் அசாம் ஆகியோர் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டதாக இலங்கை போலீசார் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் கடுவாபிட்டிய தேவாலயத்தில் ஆஜ் மொஹமத், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அலாவூதீன், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மொஹமத் நாஷர், தெஹிவளையில் அப்துல் லதீப், தெமட்டகொடையில் பாதீமா இல்ஹாம் ஆகியோரும் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

Exit mobile version