இலங்கையில் சிங்களர்கள்-இஸ்லாமியர்கள் இடையேயான மோதலால் பதற்றம்

இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியதையடுத்து அங்கு சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் கடந்த 21ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து, சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து 9 நாட்களுக்கு பிறகு சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், நீர்கொழும்பு பகுதியில் சிங்கள மக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் நேரிட்ட விபத்தை தொடர்ந்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version