3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி பாலோ ஆன்; 2-வது இன்னிங்சிலும் திணறல்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனதை தொடர்ந்து, 2-வது இன்னிங்சிலும் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 9 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்களை இழந்தது.

இந்தநிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு சுருண்டது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷமி, ஜடேஜா, நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து பாலோ ஆன் கொடுக்கப்பட்டு 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Exit mobile version