வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட், டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் டி20 தொடரில் விராட் கோலி ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரர் ஷிவம் டுபே அகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டெஸ்ட் தொடருக்கு கோலி கேப்டனாக செயல்பட உள்ள நிலையில், இஷாந்த் ஷர்மா அணியில் இணைந்துள்ளார். இந்த தொடரிலும் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version