டோக்கியோ பாராலிம்பிக் போட்டி அணிவகுப்புடன் நிறைவடைந்தது

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி, பல்வேறு நாடுகளின் அணிவகுப்புடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், துப்பாக்கி சூட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லேஹாரா தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 24ஆம் தேதி தொடங்கிய பாராலிம்க் போட்டிகள் இன்று நிறைவடைந்தது.

96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் சீனா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தைக் கைப்பற்றியது. 41 தங்கம், 38 வெள்ளி, 44 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் பிரிட்டன் இரண்டாவது இடத்தையும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 104 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது 3வது இடத்தையும் கைப்பற்றின.

நேற்றுவரை 36 தங்கப் பதக்கங்களுடன் 3வது இடத்தில் இருந்த ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி, 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதுவரை இல்லாத அளவிற்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்தியா 24வது இடத்தை கைப்பற்றியது.

170 நாடுகள் பங்கேற்ற பாராலிம்பிக் போட்டி அணிவகுப்புடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில், துப்பாக்கி சூட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லேஹாரா தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.

 

Exit mobile version