தேனியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

உறவினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டையில் கடந்த 2016ம் ஆண்டு இடத்தகராறு காரணமாக உறவினர்களுக்கிடையே மோதல் முற்றியது. மோதல் முற்றியதால், ராஜ் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குமாரின் உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விரைவு நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் விசாரிணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Exit mobile version