பூமிக்கு அடியில் நீர்வழி கால்வாயை கண்டுபிடித்த சிவனடியார்கள்!!

கரிகாலசோழ மன்னருக்கு கருங்குஷ்டத்தை நீக்கிய குளத்திற்கு, தண்ணீர் சென்ற சுரங்க கால்வாய் கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சாமி வசிஷ்டேஸ்வர் கோவில் ஆயிரத்து 400 ஆண்டு பழமையானது. முற்காலத்தில் கரிகால சோழன் மன்னருக்கு கருங்குஷ்டம் இருந்தபோது, இந்த கோவிலில் உள்ள குளத்தில் நீராடியதால் அவருக்கு கருங்குஷ்டம் நீங்கியது. இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தடைய பூமிக்கு அடியில் சுரங்க நீர்வழி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழி கால்வாய்க்குள் வண்டல்மண், களிமண் புகுந்து தண்ணீர் செல்வது தடைபட்டதால், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், சன்னதி தெருவில் இடிந்த ஒரு வீட்டின் வழியாக இந்த கால்வாய் செல்வதை சிவனடியார்கள் கண்டுபிடித்து, அங்குள்ளவண்டல் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதி அளவு பணி முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள பணியையும் முடித்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் தஞ்சையில் இன்னும் உள்ள நீர்வழி கால்வாய்களை கண்டறிந்து குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version