தல தோனி கிட்ட சிவகார்த்திகேயன் கேட்ட 5 வருஷம்..

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.இதனால் இந்திய அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று விளையாட்டை பார்ப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார்.அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தோனியிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.’தல தோனி சார், சீக்கிரம் விளையாட வாங்க.உங்களோட ஹெலிகாப்டர் 6 பாக்குறத்துக்கு நாங்க எப்பவுமே காத்திருப்போம்.இன்னும் 5 வருஷம் விளையாடுங்க, அது போதும் எங்களுக்கு என்று கூறினார்.சிவகார்த்திகேயன் தோனியிடம் கேட்டக்கொண்டது,தோனி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version