வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின் போது, சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இதயனையடுத்து நடைபெற்ற பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, சென்னையில் வங்கதேச துணை தூதரகம் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு, கடலோர பாதுகாப்பை பலப்படுத்துதல், வங்கதேசத்தில் கடலோர கண்காணிப்பு கோபுரம் அமைத்தல், வங்கதேசத்தின் வழியாக வட மாநிலங்களுக்கு LPG Gas விநியோக பாதை அமைத்தல், வங்கதேசம் இந்தியா இடையிலான ரயில் போக்குவரத்தை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் வரும் 2020-ல் பிரதமர் மோடி வங்கதேசம் செல்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.