பாதுகாப்பு துறையில் தென்கொரியாவுடனான நட்புறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக தென்கொரியா தலைநகர் சியோலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதை முன்னிட்டு, அதிபர் மாளிகைக்கு சென்ற மோடிக்கு, அரசு சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், அதனை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்தியா, தென்கொரியா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
முன்னதாக, சியோலில் உள்ள ராணுவ வீரர்களுக்கான தேசிய நினைவகத்திற்கு சென்ற மோடி, அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்குள்ள கையெழுத்து புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.