மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் குழுக்களை கலைத்து காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வந்த 280 வட்டார காங்கிரஸ் கமிட்டிகளை, கட்சியின் டெல்லி பிரதேச தலைவர் ஷீலா தீட்தித் கலைத்து உத்தரவிட்டுள்ளார். கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர்பாக 5 நபர் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையின்படி, டெல்லியில் உள்ள 280 வட்டார கமிட்டிகள் உடனடியாக கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.