விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோக்களை, விதிமுறைகளுக்குட்பட்டு ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொருளாதாரம் பாதிப்பதாக கூறி சிறைபிடித்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்றி வருவதாக விதிமுறையின் கீழ் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை சிறைபிடித்தனர். இந்த வழியாக பயணிகளை ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ சிறைபிடித்து கவன ஈர்ப்பு போராட்டம் செய்தனர். இந்த ஷேர் ஆட்டோக்களில் 4 பேர் மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 10 பேரை ஏற்றி சென்று, விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், இதனால் வருமானம் பாதிக்கப்படுவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து வந்த காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.