சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்பு சென்னை விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தில் மட்டும் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில், 12 ஆயிரத்து 380 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 426 பேர் பயணித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஒரே நாளில், சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்துள்ளனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் செய்ததில், இதுவே சாதனையாக உள்ளது.

Exit mobile version