ரயில்வே வரலாற்றில் 2019 பாதுகாப்பான ஆண்டாக அறிவிப்பு

கடந்த 12 மாதங்களாக ரயில் விபத்தின் மூலம் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை என ரயில்வே துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே துறையின் வரலாற்றில் 2019-ம் ஆண்டு பாதுகாப்பான ஆண்டாகவும், சாதனை படைக்கும் ஆண்டாகவும் அமைந்துள்ளது. கடந்த 2018-2019-ம் ஆண்டில் ரயில்வே துறையில் 16 உயிரிழப்புகளும், 2017-2018-ம் ஆண்டில் 28 உயிரிழப்புகளும், அதற்கு முந்தைய ஆண்டில் 195 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், பல்வேறு கட்ட முயற்சிகள், திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளின் விளைவாக, பயணிகள் உயிரிழப்பின்றி பாதுகாப்பான ஆண்டாக கடந்தாண்டு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version