சென்னை, புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி..

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் அவர்களுடன் வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகள் மின்சார ரயில்களில் எந்த நேரமும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாத காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டும் ஆண்கள் மின்சார ரயிர்களில் பயணிக்கலாம். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்திற்குள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் பாதுகாப்பான இடவெளியை பின்பற்ற வேண்டுமென்றும், பயணிகள் கூட்டமாக நிற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதி

Exit mobile version