8வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பட்டதாரி இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தபிரசன்னாமோசஸ் என்பவரின் மகளை அதே பகுதியை சேர்ந்த அந்தோணி என்ற பட்டதாரி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் சகோதரர்கள் பெற்றோருக்கு கொடுத்த தகவலின் பேரில் சோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து பிரசன்னா மோசஸ் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அந்தோனி மீது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி பரணிதரன் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Exit mobile version