இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவியில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
இதுபற்றி வானிலை மற்றும் புவி இயற்பியல் ஆய்வு மைய அதிகாரி முகமது படிலா கூறுகையில், மலுகு தெங்கரா பராத் மாவட்டத்திலிருந்து சுமார் 165 கிலோ மீட்டர் தொலைவில், கடற்படுகைக்கு அடியில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.