ஆப்கானில் உள்துறை அமைச்சகத்தின் அருகே கார் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் குண்டுவெடித்ததில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நஸ்ரத் ரகீமி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்துறை அமைச்சகக் கட்டடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரெனப் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் பெருமளவில் புகைமூட்டம் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் நஸ்ரத் ரகீமி தெரிவித்துள்ளதாக டோலோ எனும் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருவரைத் தலிபான்கள் கடத்தி வைத்திருந்தனர். தலிபான் தளபதிகள் இருவரை விடுவித்ததற்குப் பதில் பேராசிரியர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலைக்குப் பின் 2 நாட்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version