கடந்த ஆண்டை விட செப்டம்பர் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி வசூல் 4% அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறைகள் முடங்கியதால் மார்ச் மதத்தில் இருந்து ஜி.எஸ்.டி. வரி வசூல் குறையத் தொடங்கியது. தற்போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ள நிலையில், வருவாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் ரூ.95,480 கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,741 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.23,131 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.47,484 கோடியும் அடங்கும். கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருட செப்டம்பர் மாத வருவாய் 4% அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.