அறிவியல் ஆராய்ச்சி என்பது, 2 நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ், அரை மணி நேரத்தில் செய்யப்படும் பீட்ஸா போன்று கிடையாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
5-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் எந்த நாடும் முன்னேறியது இல்லை என்றும், அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவைப்போல் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என்றும் மோடி கூறினார்.
கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது என்றும், சந்திராயன்-2 குறித்து சிறியவர் முதல் பெரியவர் வரை பேசினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.