பள்ளி சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்திய திமுக

கூட்டணி கட்சி வேட்பாளரின் பிரசாரத்திற்கு ஆட்கள் வராததால் பள்ளி சிறுவர்களை வைத்து திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி வேட்பாளருக்கு திமுகவினர் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ளதால் ஓட்டே இல்லாத சிறுவர்களை வைத்து திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர். இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள், தேர்தல் என்றாலே என்னவென்று தெரியாத சிறுவர்களை கூட்டம் சேர்த்து ஓட்டு கேட்கும் அளவிற்கு திமுகவின் நிலைமை மாறிவிட்டது என்று பலர் கேலி செய்தனர்

Exit mobile version