பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேட்டைகாரன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. விவசாயம் தொழில் செய்துவருகிறார். இவரது மகன் ஜெகதீசன், அதேப் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். மாணவி அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் மாடு மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்ற மாணவியை கடந்த 2016 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை வழங்கி நீதிபதி வேல்முருகன் அதிரடி தீர்ப்பு அளித்தார்.