பணப்பட்டுவாடா புகாருக்கு என்ன நடவடிக்கை? – சத்யபிரதா சாகு பதில்!

பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கூறினார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 3 ஆயிரத்து 991 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்தப் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் சாகு தெரிவித்தார்.

பூத் சிலீப் இல்லாதவர்கள், 11 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி தெரிவித்தார். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க சென்று வர இலவச கால்டாக்சி ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version