பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பராக இருந்தவர். சாதிக் பாஷா கிரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதனுடைய மேலாண்மை இயக்குநராகவும் பதவி வகித்தார்.
2 ஜி வழக்கில் திமுக மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. ஆனால்
கடந்த 2011-ம் ஆண்டு திடீரென சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 ஜி வழக்கில் ஒரு முக்கிய துருப்பு சீட்டாக இருந்தவர் சாதிக் பாட்சா. இது திமுகவினருக்கும் நன்றாக தெரியும்.
2ஜி வழக்கில் தொடர்பாக பல்வேறு ரகசிய தகவல்களை அறிந்தவர் சாதிக் பாஷா, என்று கூறப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று தற்கொலை செய்ய பணிக்கப்பட்டாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழாமல் இல்லை. ஆனால் இந்த விவகாரத்தை அப்படியே மூடப் பார்த்தது திமுக.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி தான் சாதிக் பாஷாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாவே அவருடைய நினைவு தினத்தன்று யாருக்கோ செய்தி சொல்வதை போன்று விளம்பரம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் அவருடைய மனைவி. இந்த வருட விளம்பரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே என்று விளம்பரம் கொடுத்திருந்தார்.
மேலும் இன்னொரு நினைவு அஞ்சலி போஸ்டரில் , இழைத்திடாப் பிழைக்காக இன்னுயிரை ஈந்தாயே … இன்னலில் இன்னும் நாங்கள்… என்ற வார்த்தைகளும் மற்றொரு போஸ்டரில் செஞ்சோற்று( ?) கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா… என்றும் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் வாயிலாக விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதில் இருந்து சாதிக் பாஷா மனைவிக்கு பல்வேறு நெருக்கடிகள் யார் மூலமாகவோ தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதை இயல்பாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த நிலையில் சாதிக் பாஷா நினைவு தினம் முடிந்த 3 வது நாளில் சாதிக் பாஷா மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இரவு சாதிக் பாஷா மனைவி நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும் போது அவருடைய காரின் மீது தாக்குதல் நடத்தி கார் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இந்த தாக்குதலால் உயிருக்கு பயந்து போன அவர், காரை நிறுத்தாமல் அப்படியே வீட்டிற்கு சென்று விட்டார். இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வந்து தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறார் ரேஹா பானு.
சாதிக் பாஷா மனைவியை கொன்று விட்டால் எதிலிருந்தோ தப்பித்துவிடலாம் என்று சிலர் மனக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் விதி வலியது என்பதை அவர்கள் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.