பல்வேறு இடங்களில் சர்கார் படக்காட்சிகள் ரத்து !

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி இன்றும் போராட்டம் தொடர்வதால் காஞ்சிபுரம், தஞ்சாவூர் என பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் திட்டங்களை விமர்சனம் செய்யும் விதமாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் சர்கார் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ச்சைக்காட்சிகள் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் உள்ள திரையரங்கில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படாமல் படம் திரையிடப்படுவதாக வெளியான தகவலையடுத்து திரையரங்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய்க்கும், இயக்குநர் முருகதாஸுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து காலை படக்காட்சிகள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. குரோம்பேட்டை மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களிலும் சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளின் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூரில் உள்ள திரையரங்குகள் முன்பும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version