போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்திருப்பதால் அதிக வாகனங்கள் வந்து செல்கின்றன.இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தமிழக அரசு பஸ் போர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சேலம் ,கோவை, மதுரை ஆகிய மூன்று இடங்களிலும் பஸ் போர்ட் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பஸ் போர்ட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மாமங்கம் அருகே ஐடி பார்க் அமைந்துள்ள இடத்தில் காலியாக உள்ள 62 ஏக்கரில் இந்த அதிநவீன பஸ் போர்ட் அமைக்கப்பட உள்ளனர்.இதற்கான நில அளவீடு உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் முடிவடைந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.1600 கோடி.மாமங்கம் பகுதியிலிருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக மற்றொரு புறவழிச்சாலை அமைத்து சென்னை செல்லும் சாலையுடன் இணைக்கப்படும்.மேலும் விமான நிலையத்தில் உள்ளது போல் பயணிகள் காத்திருக்கும் அறை, கார்,இருசக்கர வாகனங்கள் நிறுத்திமிடம் இப்படி பல வசதிகளை கொண்டு இந்த பஸ் போர்ட் கட்டப்பட உள்ளது.
முதலில் சேலம், கோவை ஆகிய நகரங்களில் பஸ் போர்ட் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.