சேலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 307 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

Exit mobile version