119 ஆண்டுகள் பழமையான காரை ஓட்டிய சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நூறாண்டுகள் பழமையான காரை ஓட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் போட்டி வர்ணனையாளராக பேசி வருகிறார். இந்நிலையில், 119 ஆண்டுகள் பழமையான டெய்ம்லர் மெர்சிடிஸ் காரை சச்சின் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மனைவி அஞ்சலி பின்னால் அமர்ந்திருக்க, உள்ளூரைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து சச்சின் அந்த காரை ஓட்டினார். 1900ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த காரில் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட எஞ்சின் உள்ளது. இதன் மூலம் 5 பிஎச்பி முதல் 20 பிஎச்பி வரை ஆற்றல் கிடைக்கும். பழங்கால கார்கள் மீது தீரா காதல் கொண்ட சச்சின் டெண்டுல்கர். தற்போது, அவர் விண்டேஜ் காரை ஓட்டிய வீடியோவை சச்சினின் ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version