வரலாற்றில் இன்று..சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய நூறாவது சதத்தை பூர்த்தி செய்த நாள்!

சச்சின்.. சச்சின்.. சச்சின் என்ற மிகப்பெரிய கூச்சலும் ஆராவாரமும் மைதானத்தில் கேட்க வங்கதேச அணிக்கு எதிராக சரியாக 2012 மார்ச் 16 ஆம் தேதியில் தன்னுடைய நூறாவது சதத்தைப் பூர்த்தி செய்தார் கிரிக்கெட்டின் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதத்தினை பூர்த்தி செய்து ஒருநாள் போட்டியில் 48 சதத்தை அடித்திருந்து நீண்ட நாட்களாக நூறாவது சதத்திற்காக காத்திருந்தார் சச்சின். இந்த சாதனையை 2011 உலககோப்பையிலேயே அடிப்பார் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வாய்ப்பு அரையிறுதியில் பாகிஸ்தானுடனே கிடைத்தது. ஆனால் அதில் வாய்ப்பைத் தவறவிட்டார் சச்சின்.

பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய தினத்தில் சரியாக நூறாவது சதத்தை வங்கதேசத்திற்கு எதிராக அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். மக்கள் அவருக்கு உற்சாக வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடினர். இன்று வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்கவில்லை. விராட் கோலி இச்சாதனையை முறியடிப்பாரா என்று கேள்வியும் எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது. இப்போது வரை விராட் கோலி 75 சதங்கள் அடித்துள்ளார். வேண்டுமென்றால் ஒருநாளில் சச்சினின் சாதனையை முறியடிக்கலாம் என்றும் மொத்ததில் கொஞ்சம் கடினம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்த நாளில் சச்சினின் சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version