ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததொடு, சீனா உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த நாடு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் பாகிஸ்தான் அதிபர் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடுவதை விரும்பமாட்டோம் என்று பிரதமர் மோடி உறுதிபடக் கூறினார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய இந்தியாவுக்கான ரஷிய தூதர், காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம்.என்றும், அதில் நாங்கள் தலையிடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.