தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.33.44 கோடி பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் 33 கோடியே 46 லட்சம் ரூபாய், 209 கிலோ தங்கம் மற்றும் 317 கிலோ வெள்ளி ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரத சாஹூ கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் திமுக சார்பாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடிக்கு மட்டும் 2 பொது பார்வையாளர்களும், பிற நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பொது பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

தேர்தல் கருத்து கணிப்புகளை மே 19-ம் தேதிக்கு பிறகு வெளியிடலாம் என்றும், பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக ஒரு கம்பெனி துணை ராணுவம் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version