மக்களவை தேர்தல் முடிவடைந்தவுடன் ஏழை எளிய மக்களுக்கு 2000 ரூபாய் பணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று அதிமுகவிற்கு வாக்குகளைச் சேகரித்த அவர் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் ஏழை எளிய மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், 28 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.