தஞ்சையில் காய்கறி கடையின் மேலாளரை தாக்கி 15 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் காய்கறி அங்காடியில் மொத்த வியாபாரம் செய்து வருபவர் ஆசைத்தம்பி. இவரது நிறுவனத்தில் பணியாற்றும் முத்துக்குமார் என்பவர் கடையில் வசூலான 15 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக வங்கிக்கு சென்ற போது, காரில் வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து தாக்கியது.
இதில் அவர் நிலைகுலைந்த போது 15 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கும்பகோணம் கிழக்கு போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.