கச்சா எண்ணெய்யின் விலை தொடந்து சரிந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலை, கடந்த 60 நாட்களில் 26 டாலர் குறைந்துள்ள நிலையில், இதே காலகட்டத்தில், சென்னையில், பெட்ரோல் விலை 12 ரூபாய் 7 காசுகளும், டீசல் விலை 8 ரூபாய் 67 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை சரிவின் தாக்கம் காரணமாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.