கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட சுமார் 11 இலட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரின், காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 10 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சரியான ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என உரிமையாளர் அபிலாஷிடம் தெரிவித்த அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.