தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியின் பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை சன்னதி தெருவில் அமைந்துள்ள தனியார் வங்கியில் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது நகை அடகு வைத்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு நகைகளை மோசடி செய்து இருப்பதும், விதிகளை மீறி முறைகேடாக தனிநபர் கடன்களை வழங்கி இருப்பதும் தெரியவந்தது. லாக்கரில் இருந்த 40 பேரின் நகைகள் மாயமானது தொடர்பாக திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வங்கியில் இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்ததில், காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். விசாரணையில் சுமார் ஒரு கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 710 கிராம் தங்க நகைகள் மாயமானதை தெரியவந்தது. இது தொடர்பாக வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட ஊழியர்கள் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version