நியூசி.க்கு எதிரான கிரிக்கெட்: காயத்தால், இந்திய அணி தொடக்க வீரர் விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் காயம் அடைந்த ரோகித் சர்மா, அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் நேந்று விளையாடியது. கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலாவதாக இந்திய அணி பேட்டிங் செய்தது. அப்போது, ரோகித் சர்மா 60 எடுத்திருந்த போது காயம் அடைந்து போட்டியின் நடுவிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். பின்னர், பந்துவீச்சின் போதும் கூட பீல்டிங் செய்யவும் வரவில்லை. இதனால், வீக்கெட் கீப்பர் பணியில் இருந்து கே.எல்.ராகுல், கேப்டன் பொறுப்பை பார்த்து கொண்டார்.

இந்நிலையில், தசை பிடிப்பு முழுமையாக குணமடையாத காரணத்தால் ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகி உள்ளார்.

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ந்தேதியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29-ந்தேதியும் தொடங்குகிறது.

Exit mobile version