மதுரையில் அப்பள நிறுவனத்தில் மர்மநபர்கள் கைவரிசை

மதுரையில் தனியார் நிறுவனத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு நாமத்தை வரைந்து வைத்து விட்டு சென்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மதுரை கோமதிபுரத்திலுள்ள பாலசுப்ரமணியன் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கு சொந்தமான அப்பளம் தயாரிப்பு நிறுவனத்தில் கணினி, தராசு மற்றும் பணம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சுவர்களில் நாமத்தை வரைந்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மேலும் நிறுவனத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அவை இருந்த இடங்களையும், சுவர் மற்றும் கதவுகளில் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அருகிலிருந்த சிசிடிசி கேமராவை சோதனையிட்டனர். அதில் மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து, கொள்ளையடித்த பொருட்களை சாக்கு மூட்டையில் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் தடயங்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version