ஆங்கில படத்துக்கு இணையாக படம் தயாரிக்கும் போது, அதற்கு இணையாக தொழிலாளர்களின் பாதுகாப்பும் அவசியம் என, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமா படப்பிடிப்பின் போது தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் உபகரணங்களால்தான் விபத்து ஏற்படுவதாக கூறினார். திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்களை பயன்படுத்தும் போது, ஊழியர்கள் அதை கையாளும் பயிற்சி பெற்ற பிறகே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி கூறினார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்பே, ஸ்டூடியோக்களில் படப்பிடிப்பு மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி குறிப்பிட்டார்.