இந்தியன் 2 : இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க கூடாது என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை தயாரிக்க கூடாது என்பது வழக்கு. சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும், மீதம் உள்ள படபிடிப்பை முடித்து தர இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்கவும் அவர் மறுத்துவிட்டார். மேலும் லைகாவின் மனுவுக்கு இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Exit mobile version