இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சினிமா தயாரிப்பாளர்

சென்னையில், திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகிவிட்டு ஏமாற்றிய சின்னத்திரை தயாரிப்பு மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளம்பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த பல்லாவரம் தனியார் மகளிர் விடுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், சின்னத்திரை தயாரிப்பு மேலாளர் ரகு என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி கலைச்செல்வியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை கருவுற்று அதனை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பும் செய்ததால் பலவீனம் அடைந்துள்ளார்.

மேலும், இதற்காக எடுத்துக்கொண்ட மாத்திரையினால் பாதிக்கப்பட்டு தன் சுயநினைவை இழந்துள்ளார். இந்த நிலையில், கலைச்செல்வியிடம் பேசுவதையும், சந்திப்பதையும், ரவி தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல காவல்நிலையங்களில் கலைச்செல்வி சார்பில் புகார்கள் அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உரிய காவல் நிலையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட போதும், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனவும் கலைச்செல்வி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version