அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான புரட்சியாளர் விருதுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கி, பாராட்டினர்.
தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘புரட்சியாளர் விருது’வழங்கும் விழா கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 4 வது ஆண்டாக நடைபெறும் இதில், தமிழகத்தின் மதுரை, சென்னை, திருச்சி உட்பட 33 வருவாய் மாவட்டங்களில் இருந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் தகுதி வாய்ந்த 67 மாணவர்களையும், 33 ஆசிரியர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன. அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம் மற்றும் இசை போன்ற பிரிவுகளின் கீழ், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி விருதுகளை வழங்கி பாராட்டினர். பின்னர் பேசிய அவர், இந்த அங்கீகாரம், அரசுப்பள்ளி மாணவர்களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், அவர்களிடையே ஒரு சாதகமான நம்பிக்கை மனநிலையை உண்டாக்க உதவும் எனத் தெரிவித்தார்.