தலைக்கவசம் அணியாமல் சென்ற மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தலைக்கவசம் அணியாமல் சென்ற மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் திரிபாதி ஏற்கனவே சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தநிலையில், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது போக்குவரத்து காவல்துறையின் ஜிசிடிபி (GCTP) என்ற செயலிக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version