முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்திலும், வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழை-எளிய மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை வீடுகளுக்கே சென்று வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி நாளை மறுநாளுக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.