"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில், 4வது வார்டில் அமிர்தவள்ளி என்பவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நாகை மாவட்டம் பட்டினச்சேரியில், 4வது வார்டு அதிமுக வேட்பாளராக அமிர்தவள்ளி என்பவரை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக நாகை நகராடசி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தேர்தல் அதிகாரி, அமிர்தவள்ளி இறந்துவிட்டதாக பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வேட்புமனுவை நிராகரித்துள்ளார்.

இதனால் பேரதிர்ச்சியடைந்த வேட்பாளர், முந்தைய நாள் வரை தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததாகவும், வெற்றியை தட்டிப்பறிப்பதற்காக, திமுகவினர் சதி செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version